தெவிநுவர உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு தேவஸ்தானத்தின் வருடாந்த ஆடி திருவிழாவின் 6ஆவது பெரஹரா (ஊர்வலம்) ஆரம்பமாவதற்கு முன்னர், காவடி நடத்தும் குழுவினர் காவடி மடு இறங்கும் சடங்கில் ஈடுபடும்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை வைத்திருந்த மூவர் சந்தேகத்தின…
தெவிநுவர உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு தேவஸ்தானத்தின் வருடாந்த ஆடி திருவிழாவின் 6ஆவது பெரஹரா (ஊர்வலம்) ஆரம்பமாவதற்கு முன்னர், காவடி நடத்தும் குழுவினர் காவடி மடு இறங்கும் சடங்கில் ஈடுபடும்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை வைத்திருந்த மூவர் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிரி ஜெயலத் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பிலிருந்து காவடி நடனத்திற்காகத் தெவிநுவரவிற்கு வருகை தந்திருந்த காவடி குழுவொன்றைச் சோதனையிட்டபோதே குறித்த போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, கைது செய்யப்பட்ட குறித்த மூன்று சந்தேகநபர்களும் புதன்கிழமை (29ஆம் திகதி) மாத்தறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தனர்.
தெவிநுவர தேவஸ்தானத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடத்தப்படவிருந்த காவடி பெரஹரா தொடர்பில் கடந்த நாட்களில் நாட்டில் பெரும் பேச்ப்பொருளானது.
கடந்த முறை போதைப்பொருட்களுடன் செயற்பட்டதாகவும் ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்டதாகவும் அடையாளம் காணப்பட்ட சில காவடி குழுக்களை நீக்கிவிட்டு, மட்டுப்படுத்தப்பட்ட குழுக்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதற்குப் பஸ்நாயக்க நிலமே உள்ளிட்ட பெரஹரா குழு தீர்மானித்தமையே இதற்குக் காரணமாகும்.
குறித்த தீர்ச்சிக்கு ஆதரவாகவும் எதிராகவும் தெவிநுவர நகரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதுடன், பின்னர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் எனக் கூறப்படும் நபர், தெவிநுவர தேவஸ்தானத்தின் பஸ்நாயக்க நிலமே திலீப மதுசங்கவை மரண அச்சுறுத்தி, அனைத்து காவடி குழுக்களுக்கும் அனுமதி வழங்குமாறும், இல்லையென்றால் நிலமேயின் இறுதிப் பெரஹராவாக இது அமையும் எனவும் தெரிவிக்கும் குரல் பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில், மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தெஹிகெதர பாலே மல்லி என்பவரும், தெவிநுவர பெரஹரா மீது கை வைத்தால் 10 குழிகளை வெட்டி வைத்துக் கொள்ளுமாறு கஞ்சிபானி இம்ரானுக்கு சவால் விடுத்திருந்தார்.
இதற்கிடையில், தெவிநுவர தேவஸ்தானத்திற்குப் பின்னால் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதுடன், அதன் பொறுப்பை தெஹிபாலே மல்லி ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குரல் பதிவொன்றும் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது.
இதற்கமைய, தெவிநுவர காவடிப் பெரஹரா தொடர்பில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற தன்மை குறித்துக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், 6ஆவது வரிசைப் பெரஹராவிலிருந்து காவடி அம்சத்தை நீக்குமாறு பொலிஸ் மா அதிபர் கடந்த 26ஆம் திகதி மாத்தறை மாவட்டச் செயலாளருக்குப் பரிந்துரை ஒன்றை அனுப்பியிருந்தார். பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டது.


-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558066_850x460.jpg)


-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)



