இந்தியா புதுச்சேரியில் 6 பவுண் தங்க நகைக்காகப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டு 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குச் சென்ற இளம் தம்பதியினரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருணொருவரே உயிரிழந்துள்ளார். 6 பவுண் தங்க நகை கொ…

இந்தியா புதுச்சேரியில் 6 பவுண் தங்க நகைக்காகப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டு 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குச் சென்ற இளம் தம்பதியினரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருணொருவரே  உயிரிழந்துள்ளார். 6 பவுண் தங்க நகை  கொள்ளை உயிரிழந்த அணிந்திருந்த 6 பவுண் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் இளம் தம்பதியொன்றைக் கைது செய்தனர். பெண்ணிடம் பரிசொன்றைத் தருவதாகக் கூறி, அவரைக் தாக்கிய தம்பதியினர் , நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன்பின்னர், தம்பதியினர் எதுவுமே நடக்காதது போல் திரையரங்கிற்குச் சென்று 'ஜனநாயகன்' திரைப்படம் பார்த்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ள லாஸ்பேட்டை காவல்துறையினர்,   கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளைக் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.