இலங்கையில் சட்டவிரோத பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட நிறுவனங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இ…

இலங்கையில் சட்டவிரோத பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட நிறுவனங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி நேற்று (5) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்களை இணைக்கும் முறையை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் நடைமுறையில் சாத்தியமற்ற அளவிலான அதிக இலாபத்தை உறுதியளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்வதற்கு முன்பு, அதன் நம்பகத்தன்மை, சட்டபூர்வமான நிலை மற்றும் பதிவு தொடர்பான விவரங்களை முழுமையாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செயல்படுவதன் மூலம் எதிர்கால நிதி இழப்புகளைத் தவிர்க்க முடியும் என்றும் மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மத்திய வங்கியால் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களுடன் தொடர்புடையதாக பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்:

Tiens Lanka Health Care (Pvt) Ltd

Best Life International (Pvt) Ltd

Mark-Wo International (Pvt) Ltd

V M L International (Pvt) Ltd

Global Lifestyle Lanka (Pvt) Ltd

Fast3Cycle International (Pvt) Ltd

Sport Chain App and Sport Chain ZS Society Sri Lanka

OnmaxDT

MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka and MTFE DSCC Group

Fastwin (Pvt) Ltd

Fruugo Oline App / Fruugo Oline (Pvt) Ltd

Ride to Three Freedom (Pvt) Ltd

Qnet / Questnet

Era Miracle (Pvt) Ltd and Genesis Business School

Ledger Block

Isimaga International (Pvt) Ltd

Beecoin App and Sunbird Foundation

Windex Trading

The Enrich Life (Pvt) Ltd

Smart Win Entrepreneur (Pvt) Ltd

Net Fore International (Pvt) Ltd / Netrrix

Pro Care (Pvt) Ltd and Shade of Procare (Pvt) Ltd

SGO / sgomine.com

I.C.A.N. Advertising (Pvt) Ltd மற்றும் அதனுடன் இணைந்த தளங்கள்

Infinity Rover (Pvt) Ltd

TM App

மேற்கண்ட நிறுவனங்கள் அல்லது அவற்றுடன் தொடர்புடைய முதலீட்டுத் திட்டங்களில் ஈடுபடும்போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான முதலீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறும் இலங்கை மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.