தமிழ்நாட்டின் தென்காசியில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மங்கம்மாள் சாலை சாஸ்தா கோவில் பகுதியைச் சேர்ந்த சக்தி வீரமணிகண்டன் (33), இருசக்கர வாகன பழுதுநீக்கும் தொழிலாளி ஆவார்.மேலதிக விசார…
தமிழ்நாட்டின் தென்காசியில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மங்கம்மாள் சாலை சாஸ்தா கோவில் பகுதியைச் சேர்ந்த சக்தி வீரமணிகண்டன் (33), இருசக்கர வாகன பழுதுநீக்கும் தொழிலாளி ஆவார்.மேலதிக விசாரணைஅவரது மனைவி அன்னலட்சுமி (23). இவர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருந்தது.
திருமணமான முதல் வாரத்திலிருந்தே தம்பதியருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதுதொடர்பாக அன்னலட்சுமி தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முநைப்பாடு அளித்திருந்தார். காவல்துறையினர் இருதரப்பினருக்கும் அறிவுரை வழங்கிய போதிலும், பிரச்சினை தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று காலை மீண்டும் ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் சக்தி வீரமணிகண்டன், அரிவாளால் அன்னலட்சுமியை சரமாரியாக வெட்டியதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அன்னலட்சுமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்துக்குப் பின்னர் தப்பிச் சென்ற சக்தி வீரமணிகண்டன், பின்னர் தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அன்னலட்சுமியின் பெற்றோர் முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)