தான் அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலும் சில அரசியல்வாதிகளின் விமர்சனங்களுமே தன்னை அரசியல் களத்திற்குள் தள்ள முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலில…
தான் அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழலும் சில அரசியல்வாதிகளின் விமர்சனங்களுமே தன்னை அரசியல் களத்திற்குள் தள்ள முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிட்ட அவர்,
தான் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணையவில்லை என்றும், தற்போதைக்கு தனது சமூகப் பணிகளையும் வர்த்தக நடவடிக்கைகளையும் தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தனது சொந்த முயற்சியில் ‘ரீச்சா’ (REECHA) உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்து வருவது சில அரசியல்வாதிகளுக்கு பிடிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் வளர்வது தங்களது அரசியலுக்கு அச்சுறுத்தலாக அமையும் என சில அரசியல்வாதிகள் கருதுவதாகவும், இதன் காரணமாகவே தன்னை அரசியல்வாதியாக சித்தரித்து விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் கந்தையா பாஸ்கரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையில் இருப்பதைவிட, தன்னைச் சுற்றியுள்ள அரசியல்வாதிகளே தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து அரசியல் களத்திற்குள் தள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவாரா அல்லது தனது தொழில் மற்றும் சமூகப் பணிகளில் தொடர்ந்து பயணிப்பாரா என்பது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening












