போதை பொருள் வர்த்தகர்கள் மற்றும் பயனாளர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் தற்போது பல தரப்பினராலும் பேசப்பட்டு வருகின்றன. போதை பொருளுடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொ…
போதை பொருள் வர்த்தகர்கள் மற்றும் பயனாளர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் தற்போது பல தரப்பினராலும் பேசப்பட்டு வருகின்றன.
போதை பொருளுடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று முன்தினம் 11 அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமை;சசர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கருத்துக்களை பகிர்ந்திருந்தார். போதை பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும் அது ஒரு பரிந்துரை மாத்திரமே எனவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவசரமாக வெலிக்கடை சிறைச்சாலையில் தூக்கு மேடையொன்று தயார் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் தூக்கிலிடுவதற்கு அலுகோசுவா என்றழைக்கப்படும் இருவரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. போதை பொருள் பயன்பாடு மற்றும் வர்த்தகத்தினால் நாட்டில் கொலைச்சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், மரண தண்டனை வழங்குவது குறித்த பரிந்துரை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.












