அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க உள்ள நிலையில், இந்தச் சந்திப்பில் ஈரான் விவகாரமே பேச்சுவார்த்தையின் முக்கிய அங்கமாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நெதன்யாகு, "எங்க…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க உள்ள நிலையில், இந்தச் சந்திப்பில் ஈரான் விவகாரமே பேச்சுவார்த்தையின் முக்கிய அங்கமாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நெதன்யாகு, "எங்கள் சந்திப்பின் போது மேசையிலுள்ள அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிப்போம். அதில் ஈரான் விவகாரமே முதன்மையாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதும், நாட்டின் பலத்தைப் பெருக்குவதும், தங்களைச் சுற்றியுள்ள அமைதி வட்டத்தை விரிவுபடுத்துவதுமே தங்கள் தெளிவான இலக்கு என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.ட்ரம்புடன் அதிக தடவை சந்திப்பு

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்கிய பிறகு, அவரைத் தான் சந்திக்கும் எட்டாவது சந்திப்பு இதுவென்றும், உலகத் தலைவர்களில் வேறு எந்தவொரு தலைவரையும் விடத் தான் ட்ரம்பை அதிக முறை சந்தித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், தமது இந்த பயணத்தின் மற்றொரு நோக்கத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலின் மிகச்சிறந்த நண்பராகவும், தமது நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்த மறைந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிராமுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தவும் தான் அமெரிக்கா சென்றுள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.אני יוצא עכשיו לפגישה עם ידידנו הנשיא דונלד טראמפ - הפגישה השמינית שלנו מאז שנבחר לכהונתו השנייה, יותר מכל מנהיג בינלאומי אחר. זו זכות גדולה, וזו גם אחריות גדולה.בפגישתנו נדון בכל הנושאים שעל הפרק, ובראשם איראן. המטרה שלנו ברורה: לשמור על ביטחונה של ישראל, לחזק את עוצמתה…— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) July 27, 2026