அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தபால் மூல வாக்களிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் ட்ரம்பின் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு எதிராக 2…

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தபால் மூல வாக்களிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் ட்ரம்பின் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு எதிராக 23 மாநிலங்கள் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாநிலங்கள் தாக்கல் செய்த சட்டப்பூர்வ கோரிக்கைகள் தற்போதைக்கு முதிர்ச்சியற்றவை எனக் கூறி, 6-3 என்ற வாக்கு வித்தியாசத்தில் இத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

தபால் சேவை மூலம் வாக்களிப்பு

எனினும், தபால் சேவை மூலமான வாக்களிப்பு தொடர்பான வேறொரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு இன்னும் நடைமுறையில் உள்ளதால், ட்ரம்பின் முழுமையான திட்டமும் உடனடியாக நடைமுறைக்கு வருமா என்பதில் இன்னும் தெளிவற்ற நிலை காணப்படுகின்றது.

முன்னதாக, தபால் மூல வாக்களிப்பில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டியிருந்த ட்ரம்ப் நிர்வாகம், தகுதியான வாக்காளர்களின் பட்டியலை மாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததுடன், அங்கீகரிக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் மட்டுமே தபால் வாக்குகளை விநியோகிக்க வேண்டும் என அஞ்சல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவு தொடர்பில் எழுந்துள்ள சட்டரீதியான சவால்கள் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த தீர்ப்பு அமெரிக்க அரசியல் களத்தில் புதிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening