தென்கொரியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. அந்நாட்டின் வானிலை பதிவு வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக, தென்கிழக்கு நகரமான யாங்சானில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 42.5 பாகை செல்சியஸ் வெப்பம் பதிவாகி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொ…

தென்கொரியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. அந்நாட்டின் வானிலை பதிவு வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக, தென்கிழக்கு நகரமான யாங்சானில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 42.5 பாகை செல்சியஸ் வெப்பம் பதிவாகி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரியா வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, யாங்சான் நகரில் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக வெப்பம் 40 பாகை செல்சியஸைக் கடந்துள்ளது.வெப்ப அலை எச்சரிக்கை

இதன் காரணமாக நாட்டின் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் அவசரகால வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்கொரியாவில் வெப்ப அலை நாட்களின் சராசரி எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 19 நாட்களாக உயர்ந்துள்ளது.

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமே இந்த தீவிர வெப்பத்திற்கு முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த தீவிர வெப்பநிலை தென்கொரியாவுடன் மட்டும் நிற்காமல் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.கடும் வறட்சிஅண்டை நாடான ஜப்பானின் 30 மாகாணங்களில் 'வெப்ப' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஐரோப்பிய நாடுகளான கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கடுமையான வெப்பம் மற்றும் பலத்த காற்றினால் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.

வட ஆபிரிக்க நாடுகளான துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ மற்றும் அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளிலும் நிலவும் கடும் வறட்சி மற்றும் வெப்ப அலை காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.