கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா வளர்த்து வந்த 56 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்றைய தினம் (20.08.2026) க…
கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா வளர்த்து வந்த 56 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் (20.08.2026) கல்முனை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சூட்சுமமாக வளர்க்கப்பட்ட கஞ்சாகல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் 4ஆம் மாடி மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டத்தை பொலிஸார் கடந்த புதன்கிழமை (19) முற்றுகையிட்டனர்.
அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களான ஜவாத், இஸ்மத் ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.ஆரம்பகட்ட விசாரணை கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியாப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறித்த வீட்டின் மொட்டை மாடியில் மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளைப் பிடுங்கிய பொலிஸார், அவற்றைச் சான்றுப் பொருட்களாகக் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.












