போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் தலைவரான கஞ்சிபானி இம்ரான் (KPI) மலேசியாவில் உள்ள தனது வசிப்பிடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்படுகின்றது.மலேசியாவில் கைது செய்யப்பட்ட இரத்மலானை சைமா என்ற போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட…

போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் தலைவரான கஞ்சிபானி இம்ரான் (KPI) மலேசியாவில் உள்ள தனது வசிப்பிடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்படுகின்றது.மலேசியாவில் கைது செய்யப்பட்ட இரத்மலானை சைமா என்ற போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி வெளிப்படுத்திய தகவலின்படி அவர் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.   மலேசியாவிற்கு சென்ற பொலிஸ் குழு கஞ்சிபானி இம்ரானை கைது செய்யும் நோக்கத்தில், பொலிஸ் குழுவொன்று சமீபத்தில் மலேசியாவிற்கு சென்றிருந்தது. இதன்போது, கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பின் நெருங்கிய கூட்டாளியான ரத்மலானை சைமாவை, மலேசிய பொலிஸாரின் உதவியுடன் உள்ளூர் பொலிஸ் குழு கைது செய்துள்ளது.

இருப்பினும், பொலிஸ் தலைமை ஆய்வாளர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ் நாட்டை விட்டு வெளியேறிய பொலிஸ் குழு, கஞ்சிபானி இம்ரானை கைது செய்வதற்காக மலேசிய பொலிஸாருடன் இணைந்து தீவிர விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.ரத்மலானை சைமா கைதுமலேசியாவில் கைது செய்யப்பட்ட ரத்மலானாவைச் சேர்ந்த சைமா, சில காலமாக ரத்மலானாவை சேர்ந்த குடு அஞ்சுவுடன் இணைந்து ஒரு போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.இதன்பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.