கெஷ்ம் தீவில் ஒரு தம்பதியினரும் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டது, மற்றும் மினாப் மற்றும் லமெர்டில் நடந்த அட்டூழியங்களின் தொடர்ச்சிகளுக்காகவே ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். போரின் முதல் நாளில், தெற்கு ஈரானிய நகரமான மினாபில் உள்ள ஒ…
கெஷ்ம் தீவில் ஒரு தம்பதியினரும் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டது, மற்றும் மினாப் மற்றும் லமெர்டில் நடந்த அட்டூழியங்களின் தொடர்ச்சிகளுக்காகவே ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
போரின் முதல் நாளில், தெற்கு ஈரானிய நகரமான மினாபில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியை அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல் தாக்கியதில் குறைந்தது 170 பேர் உயிரிழக்கப்பட்டனர்.
அதே நாளில், தென்மேற்கு ஈரானிய நகரமான லமெர்டில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கமும் தாக்கப்பட்டதில், குறைந்தது 24 பேர் உயிரிழக்கப்பட்டனர்.
இந்தநிலையில், போர்க்களத்தில் தாங்கள் பெறும் தோல்விகளை ஈடுசெய்யும் விதமாக, அப்பாவி மக்கள் இரத்தம் சிந்துவதை அமெரிக்கா விரும்புவதாக காலிபாஃப் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே அதற்கான விலையைக் கொடுப்பார்கள் என்று அவர் எச்சரி;த்துள்ளார். (a)











