அமெரிக்கா சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு 600 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதன்மூலம் உலக சுகாதார அமைப்புக்கு (WHO) வழங்கப்பட்ட நிதியை முழுமையாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. இதனால் WHO-க்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு மற்…

அமெரிக்கா சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு 600 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதன்மூலம் உலக சுகாதார அமைப்புக்கு (WHO) வழங்கப்பட்ட நிதியை முழுமையாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. இதனால் WHO-க்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு மற்றும் சுகாதார அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.தடுப்பூசி விநியோகம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுப்படி, சுகாதாரத்துறை அமைச்சர் ரொபர்ட் கென்னடி ஜூனியர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் காவி அமைப்பில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதை அமெரிக்க நிதியுதவிக்கான நிபந்தனையாக முன்வைத்துள்ளனர்." உலகெங்கிலும் தடுப்பூசி விநியோகத்தை விரிவுபடுத்தும் இந்த சர்வதேச திட்டத்திற்கு மீண்டும் நிதியுதவி வழங்குமாறு வலியுறுத்தி வந்த குடியரசுக் கட்சி செனட்டர் சூசன் காலின்ஸ், இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

மேலும், தடுப்பூசிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்து, மாற்று முறைகளை நோக்கிய கூட்டாண்மையை உருவாக்க காவி அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நீண்டகால மோதல் போக்கின் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.ஏற்கனவே கடந்த 2025 ஜனவரியில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகும் என்றும், அதற்கான நிதி நிறுத்தப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படுவதால், போலியோ, காசநோய், எச்.ஐ.வி (HIV), மலேரியா மற்றும் தட்டம்மை போன்ற நோய்களைத் தடுக்கும் திட்டங்களும், காசா, சூடான் போன்ற போர் மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் அவசர மருத்துவ உதவிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.