மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை - முனைக்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரின் முழு சிகிச்சைச் செலவையும் கனடா - ஸ்கார்பாரோவில் அமைந்துள்ள குவாலிட்டி பேக்கரி உரிமையாளர்களான பிரான்சிஸ், ஜமுனா அந்தோணிப்பிள்ளை தம்பதியினர் உதவியுள்ளனர்.இளம் பெண் குழந்தையின் தாயாரான வசந்தி அமல்ராஜ் என்பவ…
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை - முனைக்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரின் முழு சிகிச்சைச் செலவையும் கனடா - ஸ்கார்பாரோவில் அமைந்துள்ள குவாலிட்டி பேக்கரி உரிமையாளர்களான பிரான்சிஸ், ஜமுனா அந்தோணிப்பிள்ளை தம்பதியினர் உதவியுள்ளனர்.இளம் பெண் குழந்தையின் தாயாரான வசந்தி அமல்ராஜ் என்பவரின் உயிரைக் காப்பாற்றும் நோக்கிலேயே, அவர்கள் இந்த உதவியை செய்துள்ளனர். நன்றி தெரிவிப்பு இறைவனின் பேரருளாலும், கொடையாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வலர்களின் தாராள மனதாலும், தமது 200ஆவது உயிர் காக்கும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அமைப்பினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடினமான பயணத்தில் உறுதுணையாகவும் பலமாகவும் இருக்கும் அனைத்துக் கருணை உள்ளங்களுக்கும் தமது ஆழ்ந்த மற்றும் பணிவான நன்றிகளை அவர்கள் உரித்தாக்கியுள்ளனர்.
அத்துடன், அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்த Dr. காந்திஜி, Dr. லூஷாந்தா, Dr. அருள்நிதி ஆகியோருக்கும், லங்கா - மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நிர்வாகம் மற்றும் மருத்துவக் குழு உறுப்பினர்களுக்கும் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். மக்களின் நம்பிக்கையே எங்களது நோக்கம், இணைந்து செயல்பட்டு, நாம் தொடர்ந்து பல உயிர்களைக் காப்பாற்றுவோம் என்றும் குறித்த அமைப்பினர் உறுதியளித்துள்ளனர்.









-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)