தாய்லாந்தில் இருந்து சுமார் 14.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் மொனராகலையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது. சந்தேகநபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இன்…
தாய்லாந்தில் இருந்து சுமார் 14.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் மொனராகலையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இன்று (27) காலை 9.25 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளார். விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரது பயணப் பையைச் சோதனையிட்டபோது, குறித்த போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருளானது சொஸேஜஸ் வடிவில், மேலே சொக்லேட் பூசப்பட்டு, பிரபல சொக்லேட் நிறுவனத்தின் பெயரைக் கொண்ட பொதிகளில் அடைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதானவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.









-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)