முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கை அலகின் இணைப்பாளரும், சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாதனா வைகுந்தவாசன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.நேற்றைய தினம்(24) பல்கலைக்கழகப் பேரவையினால் வழங்கப்பட்ட ஒப்புதலை அடுத்தே இவ…

முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கை அலகின் இணைப்பாளரும், சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாதனா வைகுந்தவாசன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.நேற்றைய தினம்(24) பல்கலைக்கழகப் பேரவையினால் வழங்கப்பட்ட ஒப்புதலை அடுத்தே இவர் இன்று(25.07.2026) பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.பேராசிரியராக பதவி உயர்வுபல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று 25 ஆம் திகதி சனிக்கிழமை, துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கை அலகின் இணைப்பாளரும், சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாதனா வைகுந்தவாசனின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் நேற்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அவற்றின்படி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கை அலகின் இணைப்பாளரும், சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாதனா வைகுந்தவாசன், சந்தைப்படுத்தல் துறையில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.