யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை சந்திக்காது இரகசியமான முறையில் மாவட்ட செயலகத்திற்குள் சென்று ஊடக பிரதி அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக ஊடகவியலாளர்கள் நீதி கோரி பல்வேறு கோஷங்க…

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை சந்திக்காது இரகசியமான முறையில் மாவட்ட செயலகத்திற்குள் சென்று ஊடக பிரதி அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக ஊடகவியலாளர்கள் நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர்.ஊடகவியலாளர் போராட்டம்   ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன பங்கேற்புடன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடக செயலமர்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு சுயாதீன விசாரணை மற்றும் நீதி கோரி யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் மற்றைய நுழைவாயிலால் மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்த ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன கருத்தமர்வில் பங்கேற்றுள்ளார்.யாழ்.ஊடக அமையத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை என்பதனை தெட்ட தெளிவாக கோடிட்டு காட்டியுள்ளதாக , யாழ்.ஊடக அமையத் தலைவர் கே.செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.எங்களுடன் கூட பணியாற்றிய 39 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலம் எந்த அரசாங்கமும் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.

இந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், 39 ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணையை துரிதப்படுத்தாத நிலையில், நாங்கள் அதனை கண்டித்து, விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தோம்.

கடந்த காலங்களிலும் நாம் இதனை வலியுறுத்திய போது, ஊடக அமைச்சர்கள் அனைவரும் எங்களோடு பேசுவதற்க்கு ஒத்துழைப்பு தந்தார்கள்.ஊடகவியலாளர்கள் படுகொலைஎங்களுடைய பேச்சை கேட்டார்கள். எங்களுடைய வலிகள், எங்களுடைய வேதனைகள் ஊடகவியலாளர்கள் படுகொலை சம்பந்தமான, விசாரணையை சம்பந்தமாக கேட்டார்கள்.

ஆனால் இன்று ஊடக பிரதி அமைச்சர் எங்களை சந்திக்க மறுத்திருக்கிறார். இந்த அரசாங்கம் உண்மையில் ஊடகவியலாளர்களை எப்படி கையாளுகின்றார்கள் என்பதனையே இது காட்டுகிறது.

நாங்கள் இந்த போராட்டத்தை மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலுக்கு அருகில் முன்னெடுத்த போது, வாயில் அருகில் எம்மை நிற்க விடாது அப்புறப்படுத்த மாவட்ட செயலர் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.இந்த ஊடகவியலாளர் வலி மாவட்ட செயலாளருக்கு தெரியும். தெரிந்தும் அவர் இந்த அரசுக்கு வக்காலத்து வாங்குறாரோ என்ற நிலைதான் இங்கே இருக்கிறது. தமது பதவிகளை தக்க வைப்பதற்காக இப்படி ஒரு பிழைப்பை நடத்துறது உண்மையிலேயே மனதில் வேதனையாகவும் ஒரு கேவலமான செயலாகும்

இன்று நாங்கள் 39 ஊடகவியலாளருக்கு நீதி வேண்டி இந்த இடத்தில் வந்து வலிகளோடுதான் இருக்கிறோம். ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வர முதல் ஊடகவியலாளர் படுகொலையை விசாரிப்போம். விசாரணை கோவைகளை கைகளில் எடுப்போம் என உறுதி கூறினார்கள் என