காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடுமையான எதிர்ப்புக்களையும், தமது மனக்குமுறல்களையும் வெளிப்படுத்தி இருந்தனர்.காணாமல் போனவர்கள் குறித்த 2007ஆம் ஆண்டு நினைவுகள் எப்போதும் மனதினை வத…
காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடுமையான எதிர்ப்புக்களையும், தமது மனக்குமுறல்களையும் வெளிப்படுத்தி இருந்தனர்.காணாமல் போனவர்கள் குறித்த 2007ஆம் ஆண்டு நினைவுகள் எப்போதும் மனதினை வதைத்த வண்ணம் உள்ளன. அத்தோடு, OMP அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர்சியாக கூறி வருகின்றனர்.அத்தோடு, இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனக் கோரி வடக்கு கிழக்கிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றனர்.காணாமல் போனோர் விடயமாக இருக்கலாம் அல்லது நாட்டை சீரழித்த விடயமாக இருக்கலாம் இவை அனைத்திற்குமே காரணகர்த்தாவாக ராஜபக்ச குடும்பத்தினரே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தோடு, ராஜபக்ச குடும்பத்தினரே இந்த விவகாரங்களுக்கு பொறுப்பு கூற வேண்டும்.இந்தப் பொறுப்பு இயற்கையாக கிடைக்குமா அல்லது கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றதா அல்லது கடந்த கால அரசாங்கம் போன்று தற்போதைய அரசாங்கமும் நடந்து கொள்ளுமா என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலே எழுகின்றது.காணாமல் போனவர்கள் குறித்த 2007 நினைவுகள் மற்றும் தற்போதைய சூழல் பற்றிய விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.












