சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் 2027 மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2028ஆம் ஆண்டிற்குப் பிறகு நாடு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால், நாட்டில் 15 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணிக் கைய…
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் 2027 மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2028ஆம் ஆண்டிற்குப் பிறகு நாடு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால், நாட்டில் 15 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணிக் கையிருப்பு இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக முன்னாள் அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் 8 பில்லியன் டொலர் கையிருப்பு இருக்கும் என மத்திய வங்கி எதிர்பார்ப்பதாகவும், அது நிறைவேறினால், மேலும் 6 பில்லியன் டொலர் திரட்டப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதன்படி, அந்த 6 பில்லியன் டொலரைத் திரட்டுவதற்கான ஒரு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.கடுமையான நெருக்கடி மேலும், "நாங்கள் வெளியேறியபோது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் 6 பில்லியன் டொலரை சேமித்தோம். இந்தப் பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை.2028க்குப் பிறகு நாம் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். 2028க்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த, நமது அந்நியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 15 பில்லியன் டொலராக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தற்போது, 6 பில்லியன் டொலர் மட்டுமே உள்ளது. இன்றிலிருந்து நாம் 8 பில்லியன் டொலரை சேமிக்க வேண்டும். இந்த ஆண்டின் இறுதிக்குள் 8 பில்லியன் டொலர் இருக்கும் என்று மத்திய வங்கி கூறியுள்ளது.சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மார்ச் 2027இன் இறுதியில் முடிவடையும். நாம் சர்வதேச நாணய நிதியத்தில் தொடர்ந்து இணைந்திருப்போமா இல்லையா? அரசாங்கத்தின் திட்டம் என்ன?
இந்த நாட்டில் உள்ள பிரதான பிரச்சினை, நாம் மீண்டும் கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவோம் என்பதுதான். அரசியலமைப்பைத் திருத்தி, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதா வேண்டாமா? என்பது இல்லை, நமது கவனம் இங்கேதான் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.












