மாத்தறை, திஹாகொட பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் மரமொன்றில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த விகாரைக்கு வழிபாட்டுக்காக சென்ற இரண்டு பெண்கள், நபர் ஒருவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு உடனடியாக விகாராதிபதிக்…
மாத்தறை, திஹாகொட பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் மரமொன்றில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரைக்கு வழிபாட்டுக்காக சென்ற இரண்டு பெண்கள், நபர் ஒருவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு உடனடியாக விகாராதிபதிக்கு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சடலம் கண்டுபிடிப்புசடலம் தொங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் காலணிகள், தலைக்கவசம் மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஆகியவை பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.குறித்த வெளிநாட்டவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் 52 வயதுடைய கர்தெரா ஒய்தப் எனப்படும் பிரித்தானிய பிரஜை என தெரியவந்துள்ளது.
அவர் வருகை தந்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபர் வெலிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.
பொலிஸார் விசாரணைவாடகை அடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொண்டு விகாரைக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த வெளிநாட்டவரின் விசா காலம் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப சோதனைகளில் தெரியவந்துள்ளது. வெளிநாட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












