2030ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையின் தேசிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு கூடுதலாக 132 கிலோமீட்டர் அளவுக்கு விரிவாக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த விரிவாக்கத்திற்குப் பங்களிக்கும் நான்கு முன்னெடுப்புகளில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இர…

2030ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையின் தேசிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு  கூடுதலாக 132 கிலோமீட்டர் அளவுக்கு விரிவாக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விரிவாக்கத்திற்குப் பங்களிக்கும் நான்கு முன்னெடுப்புகளில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டு முக்கியப் பகுதிகளில் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள்கடவத்தையிலிருந்து மிரிகம வரையிலான 37 கிலோமீட்டர் நீளமுள்ள முதல் கட்டப் பகுதியும், பொத்துஹேராவிலிருந்து கலகெதரா வரையிலான 33 கிலோமீட்டர் நீளமுள்ள மூன்றாம் கட்டப் பகுதியும் இதில் அடங்கும். நாட்டின் மத்திய வழித்தடம் முழுவதும் இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இவ்விரு பிரிவுகளின் கட்டுமானப் பணிகளும் தீவிரமாக முன்னேறி வருகின்றன.

தற்போது நடைபெற்று வரும் பணிகளுக்குக் கூடுதலாக, குருநாகல் - தம்புள்ள அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டமான குருநாகல் - கலேவெல வீதித் திட்டம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 38 கிலோமீட்டர் நீளமுள்ள இப்பிரிவின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 233 பில்லியன் ஆகும். இது, உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தும் வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த ஒப்பந்தப்புள்ளி செயல்முறையின் மூலம் வழங்கப்படும் மேலும், 24 கிலோமீட்டர் நீளமுள்ள ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளும் இந்த ஆண்டுக்குள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதன்முறையாக, இந்த அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் சொந்த உள்நாட்டு நிதியிலிருந்து நிதியளிக்கப்படும். நிலையான தேசிய உள்கட்டமைப்பு வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, அரசாங்கத்தின் உத்திசார் அபிவிருத்திக் கொள்கைக் கட்டமைப்பை முழுமையாகப் பின்பற்றி இந்த முன்னெடுப்புகள் செயல்படுத்தப்படுகின்றன என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.