தமிழக சட்டசபையில், உங்களுக்கு 3 சொந்த வீடு இருக்கே , எதற்காக வீங்க்கள் அரசு பங்களாவில் இருக்கிறிங்க்க என உதயநிதியிடம் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியமை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைத்திருக்கி…

தமிழக சட்டசபையில், உங்களுக்கு 3 சொந்த வீடு இருக்கே , எதற்காக வீங்க்கள் அரசு பங்களாவில் இருக்கிறிங்க்க என உதயநிதியிடம் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியமை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைத்திருக்கிறது. தவெக எம்.எல்.ஏக்கள் பெரும்பாலானவர்கள் முதல் முறையாக சட்டமன்றத்திற்குள் வந்திருக்கிறார்கள்.

அவர்கள் பலரிடமும் கார் வசதி இல்லை என்பதுடன் உதவியாளரை வைத்துக் கொள்ளவும் வசதி இல்லை.

இன்னிலையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு புதிய கார் வாங்கி கொடுக்கப்படும் எனவும், கார் மற்றும் உதவியாளர் வைத்துக் கொள்ள நீதி உதவியையும் அறிவித்தார்.திமுக 59 எம்.எல்.ஏக்களுக்கு கார் வேண்டாம்

இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ‘தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்ததுமே திமுக கஜானாவை காலி செய்துவிட்டது என்று சொன்னார்கள். ஆனால் தற்போது இலவசமாக கார்களை கொடுக்கிறார்கள். இல்லாதவர்களுக்கு கொடுங்கள்.. ஆனால் திமுகவை சேர்ந்த 59 எம்.எல்.ஏக்களுக்கும் கார் வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு எனக் கூறினார்.

அதன்பின் கார் தொடர்பாக பல திமுக எம்.எல்.ஏக்களும், தவெக எம்.எல்.ஏக்களும் கருத்து தெரிவித்தார்கள்.

அப்போது எழுந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘எதிர்க்கட்சித் தலைவருக்கு இரண்டு மூன்று வீடுகள் உள்ளது. ஆனால் அரசு பங்களாவில் இருக்கிறார்.. உங்களுக்கு சொந்த வீடு உள்ளதே எதற்கு அரசு பங்களா வேண்டும் என கேள்வி எழுப்ப முடியுமா?’ அதுபோலத்தான் இதுவும்’ என பதிலடி கொடுத்தார்.