இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி செய்யப்படவில்லை, கிழக்கு மாகாணத்திலே ஆயுர்வேத சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு பெரிய சந்தர்ப்பம் இருக்கின்றது என கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - ஓந்தாச்சிமடத்தில் 27 மில்லியன் ரூபா நி…
இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி செய்யப்படவில்லை, கிழக்கு மாகாணத்திலே ஆயுர்வேத சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு பெரிய சந்தர்ப்பம் இருக்கின்றது என கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - ஓந்தாச்சிமடத்தில் 27 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதிதாபக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கான விடுதி இன்று (12.08.2026) திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.நிதி ஒதுக்கீடுஅவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் கட்சி அரசாங்கமும் கிழக்கு மாகாண சபையும் ஆங்கில மருத்துவத்தையும் சுதேச மருத்துவத்தையும் ஒரே அளவான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என தீர்மானித்திருக்கின்றோம். 2024ஆம் ஆண்டு 119 மில்லியன் மாத்திரமே சுதேச மருத்துவ தொலைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த வருடத்தில் 257 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் அரச நிறுவனங்களுக்குரிய கட்டடங்களை நிர்மானிக்கும் போது அதனை அந்த உரிய காலப்பகுதிக்குள்ளேயே பூர்த்தி செய்ய வேண்டுமென நாம் தீர்மானித்து இருக்கின்றோம்.
கிழக்கு மாகணத்திலே இந்த வருடத்திற்குள் நான்கு வைத்தியசாலை மருத்துவ விடுதிகள் இந்த சுதேச மருத்துவ துறையிலே பூர்த்தி செய்யப்பட இருக்கின்றன. அதுபோல் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ துறையை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திருகோணமலையிலே ஆயுளவேத கிராமம் ஒன்றை உருவாக்க உள்ளோம்.
எக்கோ சுற்றுலா, அக்றோ சுற்றுலா என்றெல்லாம் கதைக்கின்றோம் ஆனால் இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி செய்யப்படவில்லை. கிழக்கு மாகாணத்திலே ஆயுர்வேத சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு பெரிய சந்தர்ப்பம் இருக்கின்றது. பஞ்சகர்ம வைத்தியம் செய்வதற்காக பலர் வெளிநாடுகளில் இருந்து வருவார்கள்.இனபேதம், சமயபேதம் இல்லை ஒயில் சிகிச்சைகள் செய்வதற்கும் வெளிநாடுகளில் இருந்து வருவார்கள். அதனை விசேடமாக கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்வதற்கு பிரதான தூர நோக்கோடு செயற்பட்டு வருகின்றது. அது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சரிடமும் கதைத்து இருக்கின்றேன்.
அறுகம்பையில் 23 மில்லியன் ரூபாவில் பஞ்சகர்மா வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு இந்திய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்திடம் இனபேதம், சமயபேதம் இல்லை. நாங்கள் மக்களுக்குத்தான் சேவை செய்கின்றோம். ரி.என்.ஏ என்.பி.பி என்பது தேர்தல் மட்டத்தோடு முடிந்து விட்டது. தேர்தலின் பின்னர் நாங்கள் ஒற்றுமையாக மக்களுக்கு வேலை செய்ய வேண்டும்.
மண்மனை தென் எருவில் பற்றி பிரதேச சபையில் 600 மில்லியன் ரூபாய் நிதி இருக்கின்றது. அதனை வைத்துக் கொண்டு அதிக அளவு வேலைகளை செய்யலாம்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கிழக்கு மாகாணத்திலும் விசேடமாக தென் மாகாணத்திலும் எல்லோர் இடத்திலும் ஒற்றுமையாகதான் மக்களுக்கு சேவை செய்து வருகின்றோம். அவ்வாறு ஒற்றுமையாக வேலை செய்வோம் என்று தான் மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளரும் உறுதியளித்திருக்கின்றார்.மக்கள் மத்தியில் பிரச்சினைகள்
சுதேச மருத்துவத்துறைக்காக கிழக்கு மாகாண அடுத்த வருடத்திலும் இதே போன்று நாங்கள் நிதி ஒதுக்கீடுகளை செய்கின்றோம். எனவே தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மக்கள் மத்தியில் பல பிரச்சினைகள் இருக்கின்றது. ஆனால் நாம் அனைவரும் இலங்கையர்களாக செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டு நாம் இலங்கையை அபிவிருத்தி செய்ய வேண்டும், கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும், களுவாஞ்சிகுடிப் பிரதேசத்தையும், அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்கு அனைவரும் நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
இழக்கு மாகாண சுதேச மருத்துவத்துறை ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் கேசுந்தரம் வினோராஜ், பிரதி ஆணையாளர் வைத்தியர் அன்ரன் அனஸ்தின், மற்றும் வைத்தியர்கள், உத்தியோகஸ்த்தர்கள். பொதுமக்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.












