மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு ஈரான் பல ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஏவப்பட்ட அனைத…
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு ஈரான் பல ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளும் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், தாக்குதலுக்கான இலக்குகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், ஈராக்கில் ஈரானுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்க மற்றும் சவுதி அரேபியப் படைகள் பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும் சென்ட்காம் அறிவித்துள்ளது.
அதேவேளை, ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் அமெரிக்க மத்திய கட்டளை மையத்தை இலக்காகக் கொண்டு ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) பொறுப்பேற்றுள்ளது. ஈரானின் நலன்களுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதுடன், அவை தோல்வியடைந்தால் இராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளார். ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் எண்ணம் இல்லை என ஈரான் மறுத்துள்ளது.
இந்த மோதல் மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வைக் கண்டுள்ளன. மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமெரிக்க பயணத்துடன் இந்தத் தாக்குதல்கள் ஒரே காலகட்டத்தில் இடம்பெற்றுள்ளமை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.








-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)