அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க பிரிவினர் (ICE) கடந்த ஜூலை மாதத்தில் 49,571 பேரைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தைப் பொறுப்பேற்ற பின்னர் பதிவான மிக அதிகளவிலான மாதாந்த கைது நடவடிக்கை இதுவெனக் சுட்டிக்…
அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க பிரிவினர் (ICE) கடந்த ஜூலை மாதத்தில் 49,571 பேரைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தைப் பொறுப்பேற்ற பின்னர் பதிவான மிக அதிகளவிலான மாதாந்த கைது நடவடிக்கை இதுவெனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதிய ஆளணி சேர்ப்புத் திட்டம் கலிபோர்னியா பல்கலைக்கழகங்களின் திட்ட தரவுகளை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்த எண்ணிக்கையானது ஜூன் மாதத்தை விட 15 சதவீதமும், பெப்ரவரி மாதத்தை விட 70 சதவீதமும் அதிகமாகும்.
ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் அதிகாரிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையே இத்தகைய கைதுகளின் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது.
குறிப்பாக டெக்சாஸ் மற்றும் புளோரிடா ஆகிய மாநிலங்களில் மட்டுமே சுமார் 20,000 கைதுகள் இடம்பெற்றுள்ளன. உள்ளூர் பொலிஸார் குடியேற்ற அமுலாக்கப் பிரிவினருடன் இணைந்து செயற்படும் ஒப்பந்தங்கள் மூலம் அங்கு அதிகளவிலான கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவையின் புதிய ஆளணி சேர்ப்புத் திட்டத்தின்கீழ் சுமார் 12,000 புதிய அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












