அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் பாலியல் துர்நடத்தை தொடர்பான வழக்கில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. வடமத்திய மாகாண உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இந்திக்க அத்தநாயக்க முன்னிலையில் இடம்பெற்ற மூடிய நீதிமன்ற அம…

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் பாலியல் துர்நடத்தை தொடர்பான வழக்கில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

வடமத்திய மாகாண உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இந்திக்க அத்தநாயக்க முன்னிலையில் இடம்பெற்ற மூடிய நீதிமன்ற அமர்வில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் வைத்தியர் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தனது சாட்சியத்தை வழங்கியுள்ளார்.2025 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி, குறித்த பெண் வைத்தியர் தனது விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சந்தேகநபரால் மிரட்டப்பட்டு பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரால் தண்டனைச் சட்டக்கோவையின் 345 மற்றும் 364 ஆகிய பிரிவுகளின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் மொத்தம் 42 சாட்சிகள் பெயரிடப்பட்டுள்ளதுடன், சிசிரிவி காணொளிகள், வைத்திய அறிக்கைகள் உள்ளிட்ட அறிவியல் மற்றும் தடயவியல் ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சந்தேகநபர் கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் பொலிஸாரால் தாம் தாக்கப்பட்டதாகவும், குறித்த பெண் வைத்தியருடனான உறவு இருவரின் சம்மதத்துடனேயே இடம்பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிவியல் ரீதியான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை நீதிமன்றம் தற்போது பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மேலும் இந்த காணொளியில் காணலாம்......