வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் தங்களின் நிலையில் குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் மற்றும் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுப…
வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் தங்களின் நிலையில் குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் மற்றும் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன்.இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட சுக்கிரன் செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே ராசியை மாற்றவுள்ளார். அதுவும் செப்டம்பர் 02 ஆம் திகதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். இதனால் பஞ்சமகா புருஷ ராஜயோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கத்தினால் சில ராசிக்காரர்கள் தங்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும், தொழிலில் நல்ல உச்சத்தை அடையப் போகிறார்கள். மேலும் ஆடம்பரமான வாழ்க்கையையும் வாழ்வார்கள். இப்போது செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.மேஷம் மேஷ ராசியின் 7 மற்றும் 2 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள்.மிதுனம் மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.விருச்சிகம் விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. போட்டிகள் மற்றும் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.சிம்மம் சிம்ம ராசியின் 10 மற்றும் 3 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன் 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக இக்காலத்தில் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், நல்ல உச்சத்தைத் தொடலாம். முக்கியமாக வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.


-559707_850x460.jpg)







-559748_850x460.jpg)

