நடப்பாண்டில் இதுவரை 90,695 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும் பதிவான நிலையில், ஓகஸ்ட் 11 ஆம் திகதி நள்ளிரவு வரை மேலும் 5,348 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாட்…

நடப்பாண்டில் இதுவரை 90,695 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும் பதிவான நிலையில், ஓகஸ்ட் 11 ஆம் திகதி நள்ளிரவு வரை மேலும் 5,348 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நாட்டில் டெங்கு நோய்ப்பரவலின் மையமாக மேல் மாகாணம் தொடர்ந்து காணப்படுவதுடன், மொத்த நோயாளர்களில் 52.9 சதவீதம் இம்மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.அதிகளவு நோயாளர்கள் அடையாளம்

கம்பஹா மாவட்டத்தில் 19,291 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 16,909 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். இவ்விரு மாவட்டங்களிலும் பதிவான நோயாளர்கள் தேசிய மொத்த எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதமாகும்.

அதேவேளை, கண்டியில் 6,466, மாத்தறையில் 5,990 மற்றும் களுத்துறையில் 5,416 நோயாளர்கள் பதிவாகியுள்ளார்கள்.

தென் மாகாணத்தில் 12,206 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 7,475 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சபரகமுவவில் 5,114, வடமேல் மாகாணத்தில் 4,050 மற்றும் ஊவா மாகாணத்தில் 4,137 நோயாளர்கள் பதிவாகியுள்ளன.

வடக்கு மாகாணத்தில் 1,287 நோயாளர்களும், கிழக்கு மாகாணத்தில் 2,799 நோயாளர்களும் பதிக்கப்பட்டுள்ளனர்.அதிக ஆபத்துள்ள பிரிவுகள் அடையாளம்

இதேவேளை, இந்த ஆண்டு டெங்கு நோயினால் 65 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இறப்பு விகிதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

31ஆவது வாரத்தில் அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 119 ஆக காணப்பட்டதுடன், நாளாந்தம் சராசரியாக 1,509 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகமாகக் காணப்படும் நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் சமூக மட்டத்திலான டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.