நாட்டில் அதிக அபாயம் உள்ள பகுதிகளில் 16,737 குடும்பங்கள் வசித்து வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.தற்போது நிலவும் பேரிடர் நிலைமை குறித்து நேற்று (03) அரசாங்க தகவல் திணைக்கள…

நாட்டில் அதிக அபாயம் உள்ள பகுதிகளில் 16,737 குடும்பங்கள் வசித்து வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.தற்போது நிலவும் பேரிடர் நிலைமை குறித்து நேற்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், வெளியேறுவதற்கான சிவப்பு அறிவிப்பு கனமழை காரணமாக, கண்டி மாவட்டத்தில் உள்ள உடுதும்பர , கங்கை இஹல கோறளை மற்றும் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் உள்ள யட்டியந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் வெளியேறுவதற்கான சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டும் என்றும், பாறைச்சரிவுப் பகுதிகளுக்கு அருகில் உள்ள கால்வாய்கள் மற்றும் வீகளின் இருபுறமும் கடைகளைக் கட்டும் மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். டிட்வா புயலால் நிலச்சரிவுகள் தீவிரமடைந்த பகுதிகளில், இந்த மழையின் காரணமாக அவை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும், அபாயகரமான சூழ்நிலை காரணமாக, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் வர் கூறியுள்ளார்.