திட்டமிட்ட குழுவொன்றினால் மேலும் 5 சிறைச்சாலைகளில் மோதல்களை ஏற்படுத்தி பாரிய அழிவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்த நாட்டையும் குழப்பகரமான நிலைக்குள்ளாக்கும் திட்டம் குறித்துப் புலனாய்வுப் பிரிவினர் தகவல்க…

திட்டமிட்ட குழுவொன்றினால் மேலும் 5 சிறைச்சாலைகளில் மோதல்களை ஏற்படுத்தி பாரிய அழிவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஒட்டுமொத்த நாட்டையும் குழப்பகரமான நிலைக்குள்ளாக்கும் திட்டம் குறித்துப் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்களுக்கு பின்னணியிலும் இந்தச் சதிக்குழு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.குழப்பகரமான நிலை

தும்பர, களுத்துறை, காலி, கொழும்பு மெகசின் மற்றும் வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலைகளில் இந்த மோதல்களை ஏற்படுத்தும் திட்டங்கள் உள்ளதாக புலனாய்வுப் பிரிவினரின் எச்சரித்துள்ளனர். சிறைச்சாலைகளில் இவ்வாறான மோதல்களை ஏற்படுத்தி நாட்டையே குழப்பகரமான நிலைக்குள்ளாக்கும் திட்டங்களுக்கு பின்னால் பல அரசியல்வாதிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல உயர் சிறைச்சாலை அதிகாரிகளும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரும் உள்ளமைக்கான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இது தொடர்பான விரிவான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகளின் பாதுகாப்புஇதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அங்கிருந்த சொத்துக்களுக்கு 15 கோடி ரூபாவிற்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. குறிப்பிட்ட காரணமின்றி இந்த மோதலானது சதிக்குழுவின் வழிகாட்டலின் பேரிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, தற்போது இலங்கையில் உள்ள அனைத்துச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.