மீண்டெழும் (Recurring) செலவினங்களைக் குறைத்து, நாட்டின் அபிவிருத்திக்கான மூலதனச் செலவினங்களை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் 2027ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத் திட்டங்களைத் தயாரித்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். காலி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட மாவ…
மீண்டெழும் (Recurring) செலவினங்களைக் குறைத்து, நாட்டின் அபிவிருத்திக்கான மூலதனச் செலவினங்களை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் 2027ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத் திட்டங்களைத் தயாரித்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தற்போது சுமார் 9 சதவீதமாக உள்ள மீண்டெழும் செலவினங்களைக் குறைத்து, 4 சதவீதமாக உள்ள மூலதனச் செலவினத்தை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு எனக் குறிப்பிட்டார்.
2027ஆம் ஆண்டுக்கான மூலதனச் செலவினமாக ரூ.2 டிரில்லியன் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தற்போதைய ஒதுக்கீட்டைவிட சுமார் 40 சதவீத அதிகரிப்பாக அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசுக்கு கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் நாட்டின் அபிவிருத்திக்காக பயனுள்ளதாகச் செலவிடப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கை எனத் தெரிவித்த அவர், எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையை ஏற்படுத்தாத, நிதி ஒழுக்கம் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவது அரசின் பிரதான நோக்கம் என்றும் வலியுறுத்தினார்.
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது, அரச துறையின் செயல்திறனை உயர்த்துவது மற்றும் அனுபவம் மிக்க அதிகாரிகளைத் தக்கவைத்துக்கொள்ள சில துறைகளில் ஓய்வூதிய வயதை அதிகரிப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், காலி மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், கிராமிய வீதி அபிவிருத்தி, குடிநீர் திட்டங்கள், வீடமைப்பு, விளையாட்டுத்துறை, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நகர அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


-558033_850x460.jpg)






-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558066_850x460.jpg)