ஹிக்கடுவையில் தயாரிக்கப்பட்டதாகக் nrhy;yg;gLk; பாதணி ஒன்றில் "அல்லாஹ்" எனும் அரபு எழுத்து பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் அண்மையில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது சம்பந்தப்பட்ட பாத…

ஹிக்கடுவையில் தயாரிக்கப்பட்டதாகக் nrhy;yg;gLk; பாதணி ஒன்றில் "அல்லாஹ்" எனும் அரபு எழுத்து பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் அண்மையில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது சம்பந்தப்பட்ட பாதணி தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், சர்ச்சைக்குரிய அந்தப் பாதணியின் வடிவமைப்பு ‘Pinterest’ தளத்தில் பொதுவெளியில் கிடைக்கப்பெற்ற ஒரு கலை வடிவமைப்பை (Art design) அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு மதத்தையோ, மதச் சின்னத்தையோ அல்லது ஒரு சமூகத்தின் மத உணர்வுகளையோ புண்படுத்தும் அல்லது அவமதிக்கும் நோக்கம் தங்களுக்குத் துளியளவும் இல்லை என்றும் நிறுவனம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

இந்த வடிவமைப்பு மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கலாம் என்பதைத் தாமதமின்றி உணர்ந்துகொண்ட உடனேயே, சம்பவத்தை அடுத்து 24 மணி நேரத்திற்குள் அந்த வடிவமைப்பை முற்றிலாகவும் மாற்றியமைக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுவரும் பொய்யான மற்றும் அடிப்படையற்ற தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும், எங்களது உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மட்டுமே கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான அவதூறுத் தகவல்களைத் தொடர்ந்து பரப்புவோருக்கு எதிராகச் சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின் மூலம் எவரேனும் முகம்சுளித்திருந்தாலோ அல்லது யாருடைய மத மற்றும் சமூக உணர்வுகள் புண்பட்டிருந்தாலோ அதற்காக நிறுவனம் தனது மனப்பூர்வமான ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

தாம் அனைத்து மதங்களையும் கலாச்சாரங்களையும் எப்போதும் மதிக்கின்றோம் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட்டு மேலும் கூடுதலான பொறுப்புணர்வுடன் செயற்படுவோம் என்றும் அந்த அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.