ரஷ்ய கடற்படை அதிகாரிகளுடன் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், ஜனாதிபதி விளாடிமிர் புதின், ஈரான் பயன்படுத்தி வரும் “கொசுப்படை” (Mosquito Fleet) கடற்போர் தந்திரத்தைப் பாராட்டியதுடன், அதனை முன்மாதிரியாகக் கொண்டு ரஷ்ய கடற்படையிலும் அதேபோன்ற திறன் வாய்ந்த பிரிவை உருவாக்க வேண்டிய…
ரஷ்ய கடற்படை அதிகாரிகளுடன் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், ஜனாதிபதி விளாடிமிர் புதின், ஈரான் பயன்படுத்தி வரும் “கொசுப்படை” (Mosquito Fleet) கடற்போர் தந்திரத்தைப் பாராட்டியதுடன், அதனை முன்மாதிரியாகக் கொண்டு ரஷ்ய கடற்படையிலும் அதேபோன்ற திறன் வாய்ந்த பிரிவை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பாதுகாப்பு பதற்றத்தைச் சுட்டிக்காட்டிய அவர், ஈரான் சிறிய அளவிலான அதிவேக தாக்குதல் படகுகளைப் பயன்படுத்தி கடற்படை நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அரச ஊடகமான ஸ்புட்னிக் வெளியிட்ட தகவலின்படி, அளவில் சிறியதாக இருந்தாலும், நவீன ஆயுத வசதிகள் மற்றும் அதிவேக இயக்கத் திறன் காரணமாக இந்தப் படகுகள் கடற்போரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக புதின் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால கடற்படை நவீனமயமாக்கல் திட்டங்களில், வேகமாகச் செயல்படும் சிறிய தாக்குதல் படகுகளை உள்ளடக்கிய சிறப்பு பிரிவை உருவாக்குவது முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் கடற்படை அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கடற்படையின் விரைவு தாக்குதல் திறனை மேம்படுத்துவதுடன், நவீன கடற்போர் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையும் வலுப்படுத்த முடியும் என ரஷ்ய தரப்பு கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.








-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)