இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நில…

இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிடம் பாதுகாப்பு கோரி பல கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.இலங்கைக்கு எந்த பொறுப்பும் இல்லை இந்நிலையில், குறித்த கப்பல்கள் இலங்கைக்கு சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், இலங்கைக்கு எந்த பொறுப்பும் இல்லை என்றும் அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் வெளியுறவு அமைச்சு விளக்கமளித்துள்ளது.

20 ஈரானிய எண்ணெய் கப்பல்கள் தங்கள் துறைமுகங்களுக்கு செல்ல முடியாமல், தற்போது இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்த பின்னணியில், ஈரானிய கொடியுடன் கூடிய சுமார் 13 எண்ணெய் கப்பல்களும், நிழற்படை கப்பல்களும் பாதுகாப்புக்காக இலங்கைக்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளது.அமெரிக்கா விதித்துள்ள கடற்படை தடை

இந்த ஈரானிய கப்பல்கள் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை தடை காரணமாகவே துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் உள்ளதாகவும், எனினும் கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என்றும் இணையதளம் கூறுகின்றது.கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு 19 கடல் மைல் தொலைவில் 'ஐரிஷ் டேனா' (Iris Dena) கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்திருந்தது.

இந்த பின்னணியில், தற்போது இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

இருப்பினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரை ஒரு நாட்டின் கடல் எல்லைக்குள் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.