அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அமெரிக்கா திரும்பியபோது, ஈரான் தரப்பிலிருந்து அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்ததைத் தொடர்ந்து ரகசியமாக விமானம் மாற்றப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அமெரிக்கா திரும்பியபோது, ஈரான் தரப்பிலிருந்து அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்ததைத் தொடர்ந்து ரகசியமாக விமானம் மாற்றப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் வழங்கிய உளவுத்தகவலின்படி, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை நோக்கி ஈரானிய ஏவுகணை தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.ட்ரம்பின் பாதுகாப்பு
இதையடுத்து, ட்ரம்பின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்க இரகசிய சேவைப் பிரிவு, அவரை பெரிய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலிருந்து சிறிய ராணுவ விமானத்திற்கு ரகசியமாக மாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அச்சுறுத்தல் தொடர்பான இஸ்ரேலிய உளவுத்தகவல் குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகம் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
CIA ஆய்வாளர்கள் இந்தத் தகவல் போதுமான ஆதாரங்களைக் கொண்டதாக இல்லை என மதிப்பிட்டதுடன், தங்களது சந்தேகத்தையும் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்ததாக Washington Post செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அச்சுறுத்தல் தொடர்பான தகவல் ஒரே ஒரு ஆதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதும், உறுதிப்படுத்தப்படாததும், குறைந்த நம்பகத்தன்மை கொண்டதுமாக இருந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
துருக்கி பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தியதாகவும், அங்காராவில் ட்ரம்பை படுகொலை செய்யும் குறிப்பிட்ட சதித்திட்டம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் வழங்கிய எச்சரிக்கை
ட்ரம்பின் அமைச்சரவையில் முக்கிய பதவிகளில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் முக்கிய அதிகாரியான ஸ்காட் பெசென்ட் ஆகியோர் பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே பயணித்ததாகவும், ட்ரம்ப் மட்டும் வேறு சிறிய இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ரூபியோ விமான மாற்றம் மற்றும் அதற்குப் பின்னிருந்த அச்சுறுத்தல் குறித்து அறிந்திருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் வழங்கிய இந்த எச்சரிக்கை, ட்ரம்பின் பாதுகாப்புக்காக மட்டுமே வழங்கப்பட்டதா அல்லது அமெரிக்காவின் பிராந்திய கொள்கை மற்றும் ட்ரம்பின் முடிவெடுப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தையும் கொண்டிருந்ததா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. சில அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள், இந்த “படுகொலை சதி” எச்சரிக்கை உண்மையான அச்சுறுத்தலைத் தெரிவிப்பதைவிட, ட்ரம்பின் முடிவெடுப்பையும் மத்திய கிழக்கு தொடர்பான அமெரிக்க கொள்கையையும் பாதிக்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் இருந்து புறப்படுவதற்கு முன்பு ட்ரம்ப், புதிய கத்தார் பரிசாக வழங்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட விமானத்தை அங்கிருந்து முன்கூட்டியே அனுப்பிவிட்டு, பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஒரு பகுதி பயணத்தை மேற்கொள்வதாக கூறியிருந்தார்.
ஆனால் பின்னர் வெளியான தகவலின்படி, ட்ரம்ப் அந்த பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணிக்கவில்லை. பத்திரிகையாளர்களும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களும் ட்ரம்ப் அதே விமானத்தில் இருப்பதாக நம்ப வைக்கப்பட்ட நிலையில், அவர் ரகசியமாக வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.












