ஆப்கானிஸ்தானில் தலிபான் நிர்வாகத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊழியர்களை உடனடியாக விடுவிக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளுக்காகச் செயற்படும் WCLRF அமை…
ஆப்கானிஸ்தானில் தலிபான் நிர்வாகத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊழியர்களை உடனடியாக விடுவிக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளுக்காகச் செயற்படும் WCLRF அமைப்பின் அலுவலகத்தை சோதனைக்குட்படுத்திய தலிபான் படையினர், அங்கிருந்த 6 ஆண் ஊழியர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ஹேராட் பகுதியில் ஐக்கிய நாடுகளின் உதவிப் பணிமனையின் இரு ஆப்கான் ஊழியர்களும் தலிபான் உளவுத்துறையினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.கைதுகள் இந்தக் கைதுகள் தொடர்பில் தமக்கு இதுவரை தெளிவான விளக்கங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும், கைது செய்யப்பட்டவர்களைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் மனிதநேய உதவிகளைப் பாதிக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி 5 ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ள நிலையிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், இந்தக் கைதுகள் குறித்து விரிவான தகவல்களைத் திரட்டி வருவதாக தலிபான் அரசாங்கத்தின் தலைமைப் பேச்சாளர் ஸபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.












