அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் நிறைவடையும் வரை போரினை தொடர்ந்து முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக ஈரான் புரட்சிகரக் காவல் படையின் தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகர் முகமது ரேசா நக்தி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்து…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் நிறைவடையும் வரை போரினை தொடர்ந்து முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக ஈரான் புரட்சிகரக் காவல் படையின் தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகர் முகமது ரேசா நக்தி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவம் தாம் எதிர்பார்த்ததை விட பலவீனமாக இருப்பதை தற்போதைய மோதலின் ஊடாக அறிந்துகொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிரிகள் அஞ்சும் நிலையை உருவாக்குவதே தங்களின் பிரதான இலக்கு எனத் தெரிவித்த முகமது ரேசா நக்தி, அதற்காக போரை டிரம்பின் பதவிக்காலம் நிறைவடையும் வரை நீடித்து அமெரிக்காவுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்துவது ஒரு வழியாகும் என கூறியுள்ளார்.
ஈரான் தொடர்ந்தும் அதிகளவான ஏவுகணைகளை உற்பத்தி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை ஏவுகணைகள் கையிருப்பு குறையும் நிலை ஏற்பட்டாலும், அமெரிக்காவுக்கு மேலும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்காவுக்கு ஆயிரக்கணக்கான பொருளாதார நலன்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளதாகவும், அவற்றை இலக்கு வைக்க முடியும் எனவும் முகமது ரேசா நக்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க இராணுவம் சந்தித்து வரும் இழப்புகள் மற்றும் உள்நாட்டில் குறைந்து வரும் அரசியல் செல்வாக்கு உள்ளிட்ட காரணங்களால் போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் முயற்சித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், டிரம்பின் பதவிக்காலம் நிறைவடையும் வரை போரை தொடர்வோம் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.











-558925_850x460.jpg)
-558926_850x460.jpg)