சுதுமலை அம்மன் கோவிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் அதனுடைய வரலாற்று முக்கியத்துவத்தை பாதுகாப்பதற்காக தொடர்ந்து முன் நிற்பேன் என்று சட்டத்தரணியும் தமிழ் மக்கள் கூட்டணியினுடைய துணைப் பொதுச் செயலாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார…

சுதுமலை அம்மன் கோவிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் அதனுடைய வரலாற்று முக்கியத்துவத்தை பாதுகாப்பதற்காக தொடர்ந்து முன் நிற்பேன் என்று சட்டத்தரணியும் தமிழ் மக்கள் கூட்டணியினுடைய துணைப் பொதுச் செயலாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில், சுதுமலை அம்மன் கோவில் என்பது தமிழ் மக்கள் மத்தியிலே மிகவும் பிரபல்யமான ஒருஆலயமாக இருக்கிறது.வேலைத்திட்டங்கள்தற்பொழுது அந்த ஆலயத்தினுடைய தர்ம கர்த்தார்கள் அந்த ஆலயத்தை முற்று முழுதாக இடித்து அதனை அழித்துவிட்டு புதிதாக அதிலே கட்டடங்களை கட்டுவதற்கு வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள்.அதன் அடிப்படையிலேயே ஆலயத்தினுடைய பின்பகுதி முற்று முழுதாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்தக் கட்டுமானங்கள் பிரதேச சபையினுடைய எந்த விதமான அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் உடைய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பொதுமக்கள் எல்லோரும் அமர்ந்திருந்து பார்த்த ஆலயத்தினுடைய முன் பகுதி அதனுடைய கூரைகள் ஏறி இருந்து பார்த்தது எல்லாம் நீங்கள் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள்.வழக்கு தள்ளுபடி தேர் முட்டி போன்றவற்றையும் இடித்தழிக்க முற்படுகிறார்கள். தீர்மானம் எடுத்திருக்கிறார்கள் என்ற வகையிலே தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற தரப்புக்கள் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று என்னோடு அணுகினார்கள்.ஆகவே அதன் மூலம் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை அம்மன் கோவில் உடைய முன்பகுதியை காப்பாற்றுகின்ற நோக்கத்தோடும், மேலதிகமாக இடித்து அழிப்பதை தடுத்து நிறுத்துகின்ற நோக்கத்தோடும் இந்த வழக்கை நாங்கள் தாக்கல் செய்திருந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கின்றார் எனக் குறிப்பிட்டார்.