தனியார் காணிகளை எடுத்து உப்பு உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிப்பதை விட அரச காணிகளை எடுத்து இதனை செய்யுங்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நேற்று(20.08.2026) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உ…

தனியார் காணிகளை எடுத்து உப்பு உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிப்பதை விட அரச காணிகளை எடுத்து இதனை செய்யுங்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நேற்று(20.08.2026) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உப்பள அமைப்பும் காணிப் பிரச்சினைகளும்வடமாகாணத்தின் வன்னி மாவட்டத்திலும், முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்தில், கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் 54 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளம் அமைக்கப்படுகின்றது.இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர் ரவிகரனுடன் பேசி குறைபாடுகளை தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வட மாகாணத்தில் பாரிய காணிப் பிரச்சினைகள் நிலவுகின்றன. கடந்த காலங்களில் பொதுமக்களின் தனியார், விவசாய மற்றும் வதிவிடக் காணிகள் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தையும் தீர்வையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்கல்முனை வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் ஊழியர்களைச் சீருடை தொடர்பான விவகாரத்தில் வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றியுள்ளமை பொருத்தமற்ற நடவடிக்கையாகும். எமது நாட்டில் அவரவர் மத மற்றும் கலாசாரத்தைப் பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு. இந்த அரசு தமது தேர்தல் மேடைகளில் இனம், மதம், குலம், வகுப்பு ரீதியான எந்தப் பாரபட்சமும் பார்க்காமல் செயற்படுவதாகக் கூறிவிட்டு, தற்போது புதிதாக நியமனம் பெற்ற 9 பேரை சீருடை விவகாரத்துக்காக இடமாற்றம் செய்வது கொள்கை விளக்கங்களுக்கு முரணானது. எனவே, உடனடியாக மேற்படி 9 ஊழியர்களையும் மீண்டும் கல்முனை வைத்தியசலையிலேயே பணியில் அமர்த்தி, அவர்களின் கலாச்சாரத்துக்கேற்ப சீருடை அணிய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4