முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணம், வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே இடம்பெற்றது என அந்தப் பல்கலைக்கழகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் இந்தப் பயணம், பிரித்தானிய அரசாங்கத்தின் அழைப்பின்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணம், வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே இடம்பெற்றது என அந்தப் பல்கலைக்கழகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் இந்தப் பயணம், பிரித்தானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இடம்பெற்றதல்ல என்றும், பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரிலேயே இடம்பெற்றதாகவும் வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.உத்தியோகபூர்வப் பயணம்
இந்த விளக்கம், குறித்த பயணத்தின் இராஜதந்திர அந்தஸ்து தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட விவாதத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ள விடயங்களின் அடிப்படையில், அரசுமுறைப் பயணம் (State Visit) மற்றும் உத்தியோகபூர்வப் பயணம் (Official Visit) ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடும் தெளிவாகின்றது. இராஜதந்திர நடைமுறைகளின்படி, அரசுமுறைப் பயணம் (State Visit) என்பது ஒரு நாட்டின் அரசுத் தலைவரிடமிருந்து மற்றொரு நாட்டின் அரசுத் தலைவருக்கு நேரடியாக வழங்கப்படும் மிக உயர்ந்த மட்டத்திலான உத்தியோகபூர்வ அழைப்பாகும்.
இவ்வாறான பயணங்களின்போது, வருகை தரும் தலைவரின் வருகை முதல் புறப்படும் வரையிலான அனைத்து செலவுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உத்தியோகபூர்வ மரியாதைகள் உள்ளிட்டவற்றை விருந்தோம்பும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.அரசுமுறைப் பயணம் மேலும், அரசுமுறைப் பயணம் என்பது ஒரு நாட்டின் அரசுத் தலைவரின் அழைப்பின் பேரில் மட்டுமே இடம்பெறும்.
பிரித்தானியா, இலங்கைக்கு அரசுமுறைப் பயணத்திற்கான அழைப்பை ஒருமுறை மட்டுமே வழங்கியுள்ளது.
அது முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கும் அரசுமுறைப் பயணத்திற்கான அழைப்பை வழங்கியிருந்தது.
இதற்கு மாறாக, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தெற்காசிய பிராந்தியத்தில் உயர்மட்ட அரசுமுறைப் பயணங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்கவின் பயணம், இரு அரசாங்கங்களுக்கு இடையிலான அரசுமுறைப் பயணம் அல்ல என்றும், கல்விசார் நிறுவனமான வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வப் பயணம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சர்வதேச இராஜதந்திர நடைமுறைகளின்படி, பல்கலைக்கழகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னாள் அரசுத் தலைவர்களை தமது நிகழ்வுகளுக்காக அழைப்பது வழக்கமான நடைமுறையாகும்.
முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தின்படி, இந்தப் பயணம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அதன் நோக்கங்களும் பல்கலைக்கழகத்தின் கல்விசார் அழைப்பின் வரம்பிற்குள் மட்டுமே அமைந்திருந்ததாக பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4







-559259_850x460.jpg)




