நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக் எதிர்க்கட்சியில் உள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் இருவரின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த தேர்தல் பிரசாரங்களுக்காக எவ்வளவு பணம் செலவி…

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக் எதிர்க்கட்சியில் உள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் இருவரின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இந்த தேர்தல் பிரசாரங்களுக்காக எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது என்பது இதுவரை சரிவர வெளியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை, தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு அரசியல்வாதிக்கு 50 பேருந்துகள் வழங்கப்பட்டதாகவும், மற்றொருவருக்கு பெருந்தொகை பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தனது விசாரணையில் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.விரைவில் அரசியல்வாதிகளிடம் விசாரணை

இது தொடர்பில் விரைவில் அரசியல்வாதிகள் இருவரையும் முன்னிலைப்படுத்தி விசாரிக்கப்பட உள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளில் ஒருவர் களுத்துறை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், ஷிரான் பாசிக் சட்டவிரோதமாக ஈட்டிய கறுப்பு பணத்தை வீட்டுத்தொகுதிகள்,5 சொகுசு ஹோட்டல்கள்,வர்த்தக நிறுவனங்கள் போன்றவைக்கு முதலீடு செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சியோல் பீச் ஹோட்டலும் தன்னுடையது என்றும் அதற்காக பெருந்தொகை பணத்தை செலவழித்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், ஷிரான் பாசிக் பொரலஸ்கமுவ, தெஹிவளை, கல்கிஸ்ஸ, இரத்மலானை, மொரட்டுவ உள்ளிட்ட பிரதேசங்களில் பெருந்தொகை பணத்தை முதலீடு செய்து பல சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.சட்டவிரோத சம்பாதித்த கருப்பு பணம் போதைப்பொருள் வலையமைப்பின் ஊடாக இவர் சட்டவிரோத சம்பாதித்த கருப்பு பணத்தை சட்டப்பூர்வ பணமாக மாற்றுவதற்காக சில வர்த்தக நிறுவனங்களுக்கு செலவு செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரால் கட்டப்பட்ட ஹோட்டல்கள் அப்பகுதியில் காணிகளை வைத்திருக்கும் ஏழை மக்களின் பெயரில் நடத்தப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, அரசு நிலங்களில் கூட ஹோட்டல், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

அல்டோ தர்மா, படோவிட்ட அசங்க மற்றும் சாண்டோ ஆகிய முக்கிய பாதாள உலக உறுப்பினர்கள் தனது நெருங்கிய நண்பர்கள் என்றும் அவர்களும் தனது போதைப்பொருள் வலையமைப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஷிரான் பாசிக் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4