மட்டக்களப்பு, வாகரை, வாழைச்சேனை, புனானை பகுதிகள் உட்பட பல பிரதேசங்களில் ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சட்டவிரோதமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா சூறையாடி சொத்து குவித்துள்ளார், எனவே சூறையாடிய காணிகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு சரணடைய வேண்டும் என ஈரோஸ் கட்சி தலைவர்…
மட்டக்களப்பு, வாகரை, வாழைச்சேனை, புனானை பகுதிகள் உட்பட பல பிரதேசங்களில் ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சட்டவிரோதமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா சூறையாடி சொத்து குவித்துள்ளார், எனவே சூறையாடிய காணிகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு சரணடைய வேண்டும் என ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று முன் தினம் (18.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். வைத்தியசாலை சீருடை பிரச்சினைஅவர் மேலும் தெரிவிக்கையில், நாடு பூராகவும் சுகாதார ஊழியர்கள் ஒரே சீருடையில் கடமையாற்றி வருகின்றனர். கல்முனை வைத்தியசாலை சீருடை பிரச்சினை நிர்வாக மட்டத்தில் சுமூகமாக முடிக்க வேண்டிய பிரச்சினை. ஆனால் இதனை ஒரு இனவாத போக்குள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பூதாகரமாகி கிழக்கை முஸ்லிம்களின் ஆதிக்கத்தை கொண்டு வந்து அரபு இராச்சியமாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டு வருகின்றார்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விடாது இன்று வரை தடுத்து இனவாத விஷத்தை காட்டி வருகின்ற இவர் கிழக்கை அரபு இராச்சியமாக கொண்டு வருவதற்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த சீருடை அதன் பிரதிபலன் தான் கல்முனையில் இஸ்லாமாபாத் நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் தான் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த விடாதற்கு காரணம்.அரசியல் இருப்பு தக்கவைப்பு இவ்வாறு தமது அரசியல் இருப்புக்கள் தக்கவைப்பதற்கு இன துவேசத்தை கக்கி வருகின்றார். இந்த பிரச்சினை சுகாதார மட்டத்தில் தீர்த்து கொள்வார்கள் விளங்கி கொள்ள வேண்டும். தமிழ் - முஸ்லிம் உறவை பிரிக்க வேண்டாம். நான் தமிழ், முஸ்லிம், சிங்களம் என பார்த்தது இல்லை, யார் பிழை செய்தாலும் பிழை பிழைதான். எனவே கிழக்கு மாகாணம் ஒரு அரபு இராச்சியமாக மாற இடம் கொடுக்க முடியாது.
அதேவேளை வாகரை காரை முனையில் தமிழர்களின் பூர்வீக இடங்களுக்கு ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் ரவூப் ஹக்கீம் கடந்த 3 தினங்களுக்கு சென்று அது முஸ்லிம்களின் பாரம்பரிய இடம் என அதற்கு போலி ஆவணங்களை தயாரித்து அரச காடுகளை அழித்து ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றனர். இதற்கு வனபரிபாலன திணைக்களம் உடந்தையாக இருக்கின்றனர். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. முஸ்லிம் மக்களுக்கு காணி தேவை என்றால் அரசாங்கத்துடன் பேசி அரச அதிபர், பிரதேச செயலாளர்களுடன் பேசி மக்களுக்கு கொடுப்பது வேறு விடயம். ஆனால் அதை விட்டு போலி ஆவணங்களை தயாரித்து கொண்டு காடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4









-559259_850x460.jpg)


