அமெரிக்க தூதுவரான ஜாரெட் குஷ்னர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவைச் சந்தித்து உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 'அமைதி சபை' மூலம் முன்வைக்கப்பட்டுள்ள காசாவிற்கான 15 அம்ச திட்டவரைவை நடைமுறைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.…

அமெரிக்க தூதுவரான ஜாரெட் குஷ்னர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவைச் சந்தித்து உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 'அமைதி சபை' மூலம் முன்வைக்கப்பட்டுள்ள காசாவிற்கான 15 அம்ச திட்டவரைவை நடைமுறைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். காசா அமைதித் திட்டத்தில் ஹமாஸ் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் காரணியாக உருவெடுத்துள்ளதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதையே இந்நகர்வு காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இஸ்ரேலுக்கு விஜயம் அமெரிக்கா முன்வைத்துள்ள இந்த அமைதித் திட்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துதல், ஆயுதங்களைக் களைதல், இஸ்ரேலிய படைகளைத் திரும்பப்பெறுதல் மற்றும் சர்வதேச அமைதிப் படையின் உதவியுடன் பாலஸ்தீன தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய நிர்வாகத்தை அமைத்தல் ஆகிய அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. எனினும், ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களை ஒப்படைக்கும் வரை காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் விலகாது எனக் கூறி, இந்த 15 அம்ச திட்டவரைவை பிரதமர் நெதன்யாஹு பகிரங்கமாக நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அமெரிக்க நிர்வாகம் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், காலத்தை கடத்துவதை விடுத்து திட்டத்தை இறுதி செய்யவே குஷ்னர் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.