பதுளை – லுணுகலை பகுதியில் 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 16 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் லுணுகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். லுணுகலை – 27 கட்டை, அலகொலகம பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், அப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒ…

பதுளை – லுணுகலை பகுதியில் 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 16 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் லுணுகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லுணுகலை – 27 கட்டை, அலகொலகம பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், அப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகிறார்.

முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கி பாக்குத் தோட்டம் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரை மறித்துச் சோதனையிட்டபோதே அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணைகளின்போது, கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை கஞ்சா விற்பனை தொடர்பில் ஏற்கனவே பலமுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்கிடமான மாணவனை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.