முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் சிறப்புத் திட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறி அரச நிதியைப் பயன்படுத்தி, எந்தவொரு திட்டத்தையும் நிறைவு செய்யாமல் அரசியல் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் சிறப்புத் திட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறி அரச நிதியைப் பயன்படுத்தி, எந்தவொரு திட்டத்தையும் நிறைவு செய்யாமல் அரசியல் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புத் திட்டப் பணிப்பாளராகவும் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார மீதான வழக்கு விசாரணையின் போது இது தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. சுகீஸ்வர பண்டாரவை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய போது, மத்திய குற்றவியல் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்த தகவலை கொழும்பு மேலதிக நீதிவானிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசியல் கூட்டங்கள்2022 ஜூலை 14 முதல் 2024 டிசம்பர் 21 வரையிலான காலப்பகுதியில், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சம்பளம் மற்றும் படிகளைப் பெற்று, அந்த நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக சுகீஸ்வர பண்டார மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.சிறைச்சாலை அதிகாரிகளால் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மேலதிக முன்னேற்ற அறிக்கையையும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் சமர்ப்பித்துள்ளது.
குறித்த நிதியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட அரசியல் கூட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சிறப்புத் திட்டப் பிரிவில் பணியாற்றியதாகக் கூறப்படும் நபர்களிடம் எதிர்காலத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்திற்கு மீண்டும் அறிவிக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.












