குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த இரண்டு கைதிகளின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் இரத்தினபுரி பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, இரண்டு கைதிகளும் பலத்த துப்பாக்கிச்சூட்டுக்காயங்களால் உயிரிழந்துள்ள…
குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த இரண்டு கைதிகளின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் இரத்தினபுரி பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, இரண்டு கைதிகளும் பலத்த துப்பாக்கிச்சூட்டுக்காயங்களால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, ஒரு கைதி தலையில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுக் காயத்தாலும், மற்றொருவர் மார்பில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டு காயத்தாலும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறைச்சாலைகளில் வெடித்த மோதல் நிலை
கடந்த வெள்ளிக்கிழமை குருவிட்ட சிறைச்சாலையில் வெடித்த கலவரத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்திருந்தனர்.
கைதிகளுள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நிலை தீவிரமடைந்ததாகவும், இதனைக் கட்டுப்படுத்துதவற்காக துப்பாக்கிச்சூடு, கண்ணீர்ப்புகை குண்டுகளும் நடத்தப்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கூறியிருந்தார்.
இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, கலவரக் கட்டுப்பாட்டுப்பிரிவு மற்றும் இராணுவமும் வரவழைக்கப்பட்டன.
இதற்கு முன்னர் நீர்கொழும்பு, மஹர, மெகசின் மற்றும் பல்லன்சேன சிறைகளிலும் கலவரம் வெடித்தது.இதில், நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 சிறை அதிகாரிகளும் 17 கைதிகளும் உயிரிழந்தனர்.
மஹர மற்றும் மெகசின் சிறைகளில் வெடித்த கலவரத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.












