சிறு குழந்தைகளுக்கு கைபேசி வழங்கும் பழக்கத்தை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் விசேட மருத்துவர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார். அதிக நேரம் கைபேசி பயன்படுத்துவது குழந்தைகளின் பார்வை மற்றும் பேச்சு வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்பதால், அவர்க…
சிறு குழந்தைகளுக்கு கைபேசி வழங்கும் பழக்கத்தை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் விசேட மருத்துவர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.
அதிக நேரம் கைபேசி பயன்படுத்துவது குழந்தைகளின் பார்வை மற்றும் பேச்சு வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்பதால், அவர்களை கைபேசியிலிருந்து விலக்கி வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், தற்போதைய வெப்பமான காலநிலையில் குழந்தைகளுக்கு போதுமான நீரை வழங்க வேண்டும். தலைவலி, வாந்தி, சோர்வு, உடல் வலி மற்றும் அடர்ந்த நிற சிறுநீர் போன்ற அறிகுறிகள் நீர்ச்சத்துக் குறைபாட்டைக் குறிக்கலாம்.
செயற்கை குளிர்பானங்களுக்குப் பதிலாக இளநீர், பழச்சாறுகள் மற்றும் கஞ்சி போன்ற இயற்கையான திரவ உணவுகளை வழங்குவது சிறந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெயிலில் நீண்ட நேரம் விளையாடுவதைத் தவிர்ப்பதுடன், பட்டம் விடும்போது காலணி அணிதல், வீட்டில் மருந்துகள் மற்றும் கூர்மையான பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத வகையில் வைத்திருத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவர் வலியுறுத்தியுள்ளார்.












