பல ஆண்டுகளாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்க…
பல ஆண்டுகளாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.மாகாணசபை தேர்தல் அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபை தேர்தல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் தேர்தல்கள் ஆணைக்குழு முன்னிலையாகி பல யோசனைகளை முன்வைத்துள்ளது.பல ஆண்டுகளாகப் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம். இது தொடர்பில் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்புகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம். குறிப்பாக, பழைய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்தலாம் என சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்தப் பரிந்துரைகளுக்கு இணையாக எமது யோசனைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் தொடர்ந்தும் இயங்குவது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானது என்பதால், செயற்குழு பரிந்துரைகளை விரைவில் ஆராய்ந்து உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.இளைஞர் பிரதிநிதித்துவம் மாகாண சபைத் தேர்தல் குறித்துத் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நேரடியாகக் கிடையாது. 2017ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் அம்சங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினாலேயே எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்பதில் சிக்கல் நீடிக்கின்றது.எனவே, நாடாளுமன்றத்தின் ஊடாகவே இதற்கான உறுதியான தீர்மானம் எட்டப்பட வேண்டும்.
செயற்குழு முன்வைத்த பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான விடயங்களைக் கருத்தில்கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு உரிய யோசனைகளை வழங்கியுள்ளது. தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ள இளைஞர் பிரதிநிதித்துவம் குறித்தும் மேலதிக யோசனைகளை முன்வைக்கவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.












