டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் அழைத்துவரப்பட்ட போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரதான நபரான லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் 'பஸ் லலித்' இலங்கையிலுள்ள 21 முன்னணி தொழிலதிபர்களிடம் இருந்து சுமார் 15 கோடி ரூபாயை கப்பமாகப் பெற்றுள்ளதாக மத்திய குற்ற…
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் அழைத்துவரப்பட்ட போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரதான நபரான லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் 'பஸ் லலித்' இலங்கையிலுள்ள 21 முன்னணி தொழிலதிபர்களிடம் இருந்து சுமார் 15 கோடி ரூபாயை கப்பமாகப் பெற்றுள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் 'பஸ் லலித்' மீதான பயம் காரணமாக இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தனது சகபாடிகளை பயன்படுத்தி பஸ் லலித் மேற்கொண்ட மனிதப் படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் டி-56 ரக துப்பாக்கிகள் உட்பட 5 துப்பாக்கிகள் தொடர்பான தகவல்களைப் பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.அந்தத் துப்பாக்கிகளைக் கண்டறிவதற்காகப் புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொலைபேசியில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்வர்த்தகர்கள் கொழும்பு பகுதியில் அதிக மதிப்புள்ள காணிகளை வாங்கும்போது வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து கப்பம் பெற்றுள்ளதாகவும் ஒரு நபர் அரசுக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்திருந்த சந்தர்ப்பத்தில் 'பஸ் லலித்' என்பவர் தனது சகபாடிகளை பயன்படுத்தி வலுக்கட்டாயமாக அந்தக் காணியைக் கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர் தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரன்மல் கொடிதுக்குவின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்கு ஆகியோரின் வழிகாட்டலில் அப்பிரிவின் பணிப்பாளர் கமல் ஆரியவன்ச உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












