கடந்த சில மணித்தியாலங்களில் மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள மழைவீழ்ச்சி, மேலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படக்கூடிய அபாயம் என்பன காரணமாக, அடுத்த 48 மணித்தியா…
கடந்த சில மணித்தியாலங்களில் மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள மழைவீழ்ச்சி, மேலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படக்கூடிய அபாயம் என்பன காரணமாக, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் பாரிய வெள்ளப்பெருக்கு நிலைமையொன்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இந்த எச்சரிக்கையானது, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட மகாவலி கங்கையை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்குப் பொருந்தும்:
உடுநுவர, உடப்பாலாத்த, யட்டிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே, கங்கை இகல கோறளை, பஸ்பாகே கோறளை, கங்கவட்ட கோறளை, ஹாரிஸ்பத்துவ, பாததும்பரை இப்பகுதிகளில் மகாவலி கங்கையை அண்டி அமைந்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், மிகவும் அவதானமாக இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. எதிர்காலத்தில் மேலும் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், உருவாகிவரும் நிலைமை தொடர்பில் மிகவும் விழிப்புடன் இருக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
களனி கங்கை தாழ்நிலப் பகுதிகளுக்குப் பெருவெள்ள அபாயம்
அத்துடன் களனி கங்கை வடிநிலத்தின் மேல் மற்றும் மத்திய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது அதிக தீவிரத்துடன் கூடிய குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்துள்ளது. அந்த மழை நிலைமை தொடர்வதுடன், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் தெஹியோவிட்டை, ருவன்வெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட களனி கங்கை வடிநிலத்தின் தாழ்நிலப் பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு நிலைமை ஏற்படலாம் என வாரிமார்க திணைக்களம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிக தீவிரத்துடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால், ஆற்றின் நீர்மட்டம் உடனடியாக உயரக்கூடும். எனவே, இந்நிலைமை தொடர்பில் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.












